10-ம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட் வாங்க வரும் மாணவர்களுக்கு 2 முக கவசங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் 2 முக கவசங்கள் வழங்க பள்ளி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாவட்ட மாணவர்களுக்கு வழங்க 46.5 லட்சம் முக கவசங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ல் 11 ஆம் வகுப்பு மற்றும் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்டை  www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும், நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால், கட்டுப்பாட்டுப் பகுதியில் தேர்வர்களின் வீடுகளை தேடி ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, வெளியூரிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் வீடு தேடி சென்று வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here