தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநில குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்துகளில் வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலியோ சொட்டு மருந்துகளில் வைரஸ் இருப்பது தெரியவந்ததை அடுத்து காஸியாபாத்தில் இயங்கி வரும் போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மருந்து வழங்கக்கூடாது என்றும் , மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது என்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தடை விதித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்தில் மிக மோசமான வைரஸ் கலந்திருப்பது கண்டறியப்பட்டது .

இளம்பிள்ளைவாதம் என்ற போலியோ நோயைத் தடுக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சொட்டு மருந்துகளில் சுமார் 1.5 போலியோ சொட்டு மருந்து பாட்டில்களில் டைப் 2 போலியோ வைரஸ் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

1

இதைத் தொடர்ந்து மூன்று மாநிலங்களிலும், சமீப காலங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும், வைரஸ் பாதிப்பால் உடல்நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்குமாறும் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஸியாபாத் இயங்கி வரும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போலியோ மருந்துகள் விநியோகிக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளும், போலியோ சொட்டு மருந்துகளை திரும்பப் பெறவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டைப் 2 போலியோ வைரஸ் கலந்திருந்த மருந்துகளின் மாதிரிகளை கஸ்ஸுலியில் இருக்கும் மத்திய மருந்து ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது . அச்சோதனையில் வந்த முடிவுகள் வைரஸ் இருந்தது என்பதை உறுதிபடுத்தியது.

உத்தரப்பிரதேசத்தில் சமீப நாட்களில் ஏராளமான குழந்தைகள் பலியானதற்கும், இந்த போலியோ மருந்துக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டைப் 2 போலியோ வைரஸ் கலந்திருந்த மருந்து பாட்டில்களை தெலங்கானா திரும்பப் பெற்றிருக்கிறது.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here