1, 2 சீட்டு தருவதாக இருந்தால் அதிகமுகவுடன் கூட்டணி வேண்டாம்; இரட்டை இலையில் போட்டி இல்லை – சரத்குமார்

0
223

அதிமுக கூட்டணியில் ஓரிரு சீட்டு கொடுத்தால் போதாது. அப்படி இருந்தால் கூட்டணியில் சேர மாட்டோம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக மதுராந்தகம் வருகை தந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தொடர்ந்து தமிழகத்தில் உயர்ந்து வரும் டீசல், பெட்ரோல் விலை உயர்வை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலக வர்த்தகத்தில் டாலர் விலை உயரும் போது பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுகிறது. ஆகவே பெட்ரோலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும். அப்போது போதுதான் அதுசிறப்பாக இருக்கும்.

அதிமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியில்தான் உள்ளன என முதலமைச்சர் கூறியிருக்கிறார்கள். கூட்டணி தொடரும் என்றும் கூறியுள்ளார். பிரேமலதா இதுவரை அதிமுக கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறியிருக்கிறார்.

கூட்டணியில் எங்களுக்கு ஓரிரு தொகுதி கொடுத்தால் கூட்டணியில் தொடர மாட்டோம் என ஏற்கனவே மண்டல கூட்டத்திற்குப் பிறகு அறிவித்திருக்கிறோம். அதுபோல தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பதை ஏற்கனவே எங்கள் கட்சி சார்பில் தெரிவித்திருக்கிறோம்.

சசிகலா அதிமுகவுடன் சேர வாய்ப்பு உள்ளதா என்பதை அது அவர்கள் இருவரும்தான் பேசி முடிவெடுக்க வேண்டும். சசிகலா ஏற்கனவே இயக்கத்தில் இருந்து இருக்கிறார். பிறகு வெளியேறி இருக்கிறார். அவர்கள் இருவரும் சேருவது பற்றி அவர்கள்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் சரத்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here