-1.1 சதவீதத்துக்கு சரிந்த தொழிற்சாலை உற்பத்தி; நீடிக்கும் பொருளாதார வீழ்ச்சி

0
292

தொழிற்சாலை உற்பத்தி கடந்த 2018 ஆகஸ்டில் 4.8 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூலை மாதத்தின்போது 4.3 சதவீதமாக குறைந்திருந்த நிலையில், ஆகஸ்டில் – 1.1 சதவீதத்திற்கு சென்றிருக்கிறது. 

Industrial Production அல்லது Factory output எனப்படும் தொழிற்சாலை உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் – 1.1 சதவீதத்திற்கு சென்று விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

தொழிற்சாலை உற்பத்தி கடந்த 2018 ஆகஸ்டில் 4.8 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூலை மாதத்தின்போது 4.3 சதவீதமாக குறைந்திருந்த நிலையில், ஆகஸ்டில் -1.1% குறைந்திருக்கிறது .  

தொழிற்சாலை உற்பத்தி சதவீதம் குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் 23 முக்கிய தொழில்துறை குழுமங்களில் 15 குழுமங்களின் தொழிற்சாலை உற்பத்தி 1% க்கும் கீழே சென்றது. இது முந்தைய ஆண்டுகளில் ஆகஸ்ட் மாத முடிவுகளை பார்க்கும்போது மிகவும் குறைவான உற்பத்தியாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தொழில்துறை உற்பத்தி சரிவு  பொருளாதாரம் மேலும் சரிவை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது என்பதை  நமக்கு தெளிவாகச் சொல்கிறது. உற்பத்தி, மின்சாரம், கேப்பிட்டல் கூட்ஸ், கட்டுமானப் பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் என பல முக்கிய துறைகள் பலத்த சரிவைச் சந்தித்து இருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 2018-ஐ விட இந்த ஆகஸ்ட் 2019-இல் உற்பத்தித் துறை -1.2% , மின்சாரம் -0.9 %,கேப்பிட்டல் கூட்ஸ் -21.0 %, கட்டுமானப் பொருட்கள் -4.5 %, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் -9.1 % என சரிவைச் சந்தித்து இருக்கிறது.

இந்தியாவின் ஆட்டோமொபைல் விற்பனை விவரங்களை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) வெளியிட்டது. அதிலும், இந்திய ஆட்டோமொபைல் விற்பனை கடந்த செப்டம்பர் 2018-ஐ காட்டிலும் செப்டம்பர் 2019-ல் சுமார் 22 சதவிகிதம் விற்பனைச் சரிவைச் சந்தித்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி வரும் தரவுகள் அனைத்தும் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெளிவாகச் சொல்கிறது. 

http://ndtv.com 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here