ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவன பெயர்ப் பலகைகளும் தெலுங்கிலேயே வைக்கப்பட வேண்டும் என்றும், ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் என அனைத்துப் பள்ளிகளும் தெலுங்கு மொழி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதே போன்று உருது மொழி பயில்பவர்கள் அதனை விருப்பப் பாடமாக கற்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ஐதராபாத்தில் ஐந்து நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்தான் இந்த முடிவெடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: “நீட்டுக்கு எதிராக போராடும் மாணவர்களை தமிழக அரசு மிரட்டுகிறது”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்