இந்தியாவின் 73 சதவிகித சொத்துக்கள் ஒரு சதவிகித மக்களிடம் குவிந்துள்ளது என சர்வதேச அமைப்பான ஆக்ஸ்போம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச அமைப்பான ஆக்ஸ்போம், உலக பொருளாதார அமைப்பு மாநாடு தொடங்குவதற்கு முன்னர், இந்திய மக்களின் வருவாய் சமநிலை, சொத்துக்களின் சதவிகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தியது. இதில், இந்தியாவின் 73 சதவிகித சொத்துக்கள் ஒரு சதவிகித மக்களிடம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், சர்வதேச அளவிலும் 82 சதவிகித சொத்துக்கள், ஒரு சதவிகித மக்களிடம் உள்ளதாகவும், 370 கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு ஆய்வின்படி, இந்தியாவில் ஒரு சதவீத மக்களிடம், நாட்டிலுள்ள 58 சதவிகித சொத்துக்கள் இருந்ததாகவும், அது தற்போது 73 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த ஒரு சதவிகித மக்களிடம் 20.9 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இது 2017-18 நிதியாண்டின் பட்ஜெட்டிற்கான மதிப்புக்குச் சமமாகும்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்