இங்கிலாந்தில் உள்ள ஒரு இந்திய உணவு விடுதியில் மனித இறைச்சி பரிமாறப்படுவதாக வெளியான போலியான தகவலையடுத்து உணவு விடுதியை கட்டாயப்படுத்தி மூடிய சம்பவம் முகநூலில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள் : மன்னிப்புக் கேட்ட சிவசேனா எம்.பி

இது குறித்து லண்டனில் உள்ள காரி ட்விஸ்ட் உணவு விடுதியின் உரிமையாளர், ஷின்ரா பேகம், “சிலர் கட்டிடத்தை இடிக்கப்போவதாக மிரட்டினார்கள். ஒரு நபர் விடுதியைத் திறந்தால் ஜன்னல்களை உடைக்கப் போவதாக மிரட்டினார். பொதுமக்கள் சிலர் போலீசில் புகார் அளித்தனர்.. இதனால் எங்கள் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் என்ன தைரியம் இருந்தால் எங்களுக்கு மனித இறைச்சியை பரிமாறுவீர்கள் என கேட்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ’புதிய பாடத்திட்டத்தில் யோகா சேர்க்கப்படும்’

மேலும் அவர், ”இந்த வதந்தி பல இடங்களில் பரவியுள்ளது. மக்களும் இதை நம்புகிறார்கள். நாங்கள் 60 வருடங்களாக இந்த உணவு விடுதியை நடத்தி வருகிறோம். யாரோ இதுபோன்று ஏதாவது ஒன்றை எழுதிவிட்டால் அதனை வைத்துக்கொண்டு விடுதியை மூடிவிட முடியுமா?. இது குறித்த அந்த வதந்தி வெறும் ஒரு பத்தி மட்டுமே உள்ளது. அதிலும் ஏகப்பட்ட எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள் உள்ளன. அதையும் மக்கள் உண்மை என்று நம்புகிறார்கள்” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ரஜினி, கமல், அஜித், விஜய் நினைத்தால் தமிழகம் பசுமையாகும்… எப்படி?

அந்த போலியான செய்தியில், “இந்திய உணவகத்தின் உரிமையாளர் ரர்ஜன் படேல் அவரது உணவகத்தில் மனித இறைச்சியை பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். மேலும் அவரது உணவகத்தில் இருந்து 9 மனித உடல்கள் மற்றும் இறைச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து படேல் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். உணவகம் மூடப்பட்டுள்ளது” என்று இருந்தது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்