ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி ஆட்டத்தில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

IPL-2018-Playoffs-Chennai-Super-Kings-Sunrisers-Hyderabad-Kolkata-Knight-Riders-Rajasthan-Royals

புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் முதலிடத்தையும், சென்னை இரண்டாம் இடத்தையும், கொல்கத்தா மூன்றாம் இடத்தையும், ராஜஸ்தான் நான்காம் இடத்தையும் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 27- ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். தோல்வியை சந்திக்கும் அணி 25- ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் விளையாடும்.

பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் இரவு 7 மணிக்கு தொடங்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்