ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் யாசின் பட்கல் உட்பட ஐந்து பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில், தில்சுக்நகரில் வர்த்தகப் பகுதியில் பயங்கர வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 130 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பினர், இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்த யாசின் பட்கலை 2013ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், பீகாரில் கைது செய்தனர்.

குற்றவாளிகள் என தீர்ப்பு

இது தொடர்பான வழக்கு ஹைதரபாத் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 150 சாட்சியங்களிடம் விசாரிக்கப்பட்டு, கடந்த டிச.13ஆம் தேதி, யாசின் பட்கல், அசதுல்லா அக்தர், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியா-உர்-ரஹ்மான், முஹம்மது தக்சின் அக்தர் மற்றும் அஜாஸ் ஷேக் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கான தண்டனை விவரத்தை திங்கட்கிழமை அறிவித்தது. இவ்வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐந்து பேருக்கும் தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கில் தொடர்புள்ள முக்கிய குற்றவாளியான ரியாஸ் பட்கல் தலைமறைவாக உள்ளார்.

இதையும் படியுங்கள் : சவுதி: ஒரே நாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்