ஹைதராபாத் நகரில் 27 வயதான கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.

பாலியல் வல்லுறவுக்கு எதிரான சட்டங்களில் நிறைய மாற்றங்கள் செய்த பிறகும், இந்தியாவில் பெண்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பான சூழ்நிலை இருக்கிறதா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியது. 

கால்நடை மருத்துவர் கொலை தொடர்பாக கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது 4 பேரும் தப்பிசெல்ல முயற்சி செய்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி அவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் அறிவித்துள்ளது

இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்து இருந்தார்.

 இன்று (டிச-6) வெள்ளிக்கிழமை காலை 

நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டருக்கு சைபராபாத் காவல்துறை எஸ்.பி. விசி சஜ்ஜனார் அனுமதி அளித்துள்ளார். இவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார். 1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் குழுவைச் சேர்ந்தவர். இவர்தான் தற்போது என்கவுண்டருக்கு அனுமதி அளித்து இருக்கிறார்.
இதேபோன்று 2008ஆம் ஆண்டிலும் வாரங்கல் என்ற இடத்தில் நடந்த என்கவுண்டருக்கும் டிசம்பர் மாதத்தில் இவர்தான் அனுமதி அளித்து இருந்தார். அப்போது வாரங்கல் காவல் துறை கமிஷனராக இருந்தார்.காகதியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கல்வி பயின்று வந்த ஸ்வப்னிகா மீது ஹரிகிருஷ்ணா, சஞ்சய், ஸ்ரீநிவாஸ் ஆகிய மூவர் ஆசிட் வீசினர். இதையடுத்து இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல சஜ்ஜனார்தான் அனுமதி அளித்து இருந்தார்.இதேபோல் நக்சல்கள் நயீமுதின் என்ற நயீமை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல அனுமதி அளித்து இருந்தார். அப்போது சிறப்பு புலனாய்வு கிளையின் ஐஜியாக சஜ்ஜனார் இருந்தார். ஐதராபாத் புறநகரில் வைத்து நயீம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் காவல் துறையின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் சஜ்ஜனார். தற்போது தெலுங்கானாவில் பணியாற்றி வருகிறார். LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here