ஹேமந்த கர்கரேயை கொன்றது ஆர்எஸ்எஸ்; இனவெறி கொலைகாரர் மோகன் பகவத் – ராப் பாடகி மீது தேசத் துரோக வழக்கு

Hard Kaur booked for sedition over online remarks against Yogi Adityanath, Mohan Bhagwat

0
3584

யோகி ஆதித்யநாத்துக்கு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்ட ராப் பாடகி  ஹர்ட் கவுர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது .  

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராப் பாடகி ஹர்ட் கவுர் மீது  தேசதுரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் இணைந்து இந்த வழக்கினை பதிவு செய்துள்ளது. 

 பாடகி ஹர்ட் கவுர் திங்களன்று இண்ஸ்டாகிராமில்  போட்ட பதிவுகளுக்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. தேச துரோகத்தை உள்ளடக்கிய இந்திய தண்டனைச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வாரணாசியில் ஹர்ட் கவுருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

புகாரை வழக்கறிஞர் சஷாங்க் சேகர் தாக்கல் செய்தார். மேலதிக விசாரணைக்கு சைபர் குற்ற விசாரணை பிரிவுக்கு அனுப்பப்படும் எனத் தெரிகிறது. ஹர்ட் கவுர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் புகைப்படங்களை இரண்டு பதிவுகளில் பயன்படுத்தியிருந்தார். 

“who killed hemant karkare’ என்ற புத்தகத்தின் ஒளிப்படத்தை பதிவிட்டுவிட்டு ஆர் எஸ் எஸ் தான் செய்தது  என்று பதிவிட்டிருந்தார் ஹர்ட் கவுர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் .

View this post on Instagram

RSS DID #indiastandup

A post shared by HARDKAUR (@officialhardkaur) on

மற்றுமொரு பதிவில் யோகி ஆதித்யநாத்தின் ஒளிப்படத்தை பதிவிட்டுவிட்டு இவரை ‘orangerapeman ‘ என்றழைக்கலாம் என்று பதிவிட்டிருந்தார். 

 

மற்றுமொரு பதிவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்தின் புகைப்படத்தை பதிவிட்டு இந்தியாவில் நடக்கும் அனைத்து தீவிரவாத தக்குதலையும் நடத்துவது ஆர் எஸ் எஸ் தான். 26/11, புல்வாமா உள்ளிட்ட அனைத்து தாக்குதல்களையும் நடத்தியது ஆர் எஸ் எஸ்தான். இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் ஆர் எஸ் எஸ்தான். ஜாதீயத்தை வளர்த்துவிடுபவர்கள். காந்தியை கொன்றவுடன் ஆர் எஸ் எஸ் இயக்கத்தைத் தடை செய்தார் சர்தார் வல்லபாய் பட்டேல். ஆர் எஸ் எஸ் ஒரு இனவெறி கொலைகாரர் என்று பதிவிட்டிருந்தார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here