சமூக  வலைதளங்களில்  ஒன்று  டிவிட்டர்.  உலகளவில்  பிரபலங்கள்  பலரும் இதைப்  பயன்படுத்தி  வருகின்றனர்.  உலகத் தலைவர்கள் முதல் முக்கிய பிரமுகர் வரை டிவிட்டர் முக்கிய  தகவல்  பரிமாற்ற தளமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்,  டிவிட்டர் சிஇஓ  ஜாக் டோர்சேவின்(#JackDorsey) டிவிட்டர் கணக்கை  நேற்று மதியம்  மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். ஹேக் செய்யப்பட்ட  அவரது கணக்கில் இருந்து  
இனவெறியைத் தூண்டும் வகையிலான பதிவுகள் பகிரப்பட்டன. 10நிமிடங்களுக்கு மேலாக நீடித்த டிவீட்கள் பின்னர் தானாகவே அழிக்கப்பட்டன.

பின்னர்இதுகுறித்துதகவல்வெளியிட்டடிவிட்டர், ”ஜாக்கின் கணக்கு தற்போது பாதுகாப்பாக உள்ளது. டிவிட்டரின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டில் உள்ளன. டிவிட்டர் பாதுகாப்பு அமைப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை. டிவிட்டருடன் இணைக்கப்பட்ட செல்போன் மூலமாக ஹேக் செய்யட்டது. க்ளவ்ட்ஹோப்பர் வழியாக ஜாக்டோர்சேவின் டிவிட்டர் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவினர்’’ என தெரிவித்துள்ளது. முதலில் ஜாக்டோர்சேவின் செல்போன் எண்ணை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஹேக்கர்கள் எஸ்எம்எஸ் வாயிலாக டிவீட் பதிவாகும் படி ஹேக் செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் சிஇஓவின் கணக்கே ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில் டிவிட்டரின் பாதுகாப்பு அம்சங்களை அந்நிறுவனம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.