ஹெச்.ராஜா, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யப்பபுரம் என்ற ஊரில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின் ஹெச்.ராஜா, தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. இல்லத்தில் நடைபெற்ற ரெய்டை குறிப்பிட்டு போலீஸாரையும் சென்னை உயர் நீதிமன்றம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் விமர்சனம் செய்ததாக வீடியோ வெளியானது.

இதைத் தொடர்ந்து ஹெச்.ராஜா மீது நடவடிக்கை கோரி சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லவும் வழக்கறிஞர்கள் தயாராகி வருகிறார்கள்.

வீடியோ வெளியான விவகாரத்தில் ஹெச்.ராஜா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளை பணி செய்ய விடாதது, இரு சமூகங்கள் இடையே பிரச்னை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல், நீதிமன்றம் குறித்து விமர்சனம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்