ஹெச்.ராஜாவை ஏன் ‘வெச்சு’ செய்றாங்க?

0
421

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜாவை ஏன் இணையத்தில் அனைவரும் கலாய்க்கிறார்கள்? அரசியல் என்றால் ஒதுங்கிப் போகும் சினிமாக்காரர்களே ஓசி சவாரி மாதிரி அவரை ஈஸிக்கொள்கிறார்கள் என்றால் எப்படி அதனை புரிந்து கொள்வது?

ஒரு சராசரிப் படம் சாதாரணமாக வெளிவந்து காணாமல் போயிருக்க வேண்டியது. தமிழிசையும், ஹெச்.ராஜாவும் கொடுத்த ஓவர் பில்டப்பால் இன்று 200 கோடியை வசூலித்திருக்கிறது (என்று சொல்கிறார்கள்). படம் ஓடியதற்கான முழுக்காரணம் இவர்கள் இருவரையே சாரும் என்பதால் உதயநிதி தனது இப்படை வெல்லும் படத்துக்கும் ஹெச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம் என்று சொன்னார். அது இணையத்தில் வைரலானது. ஹெச்.ராஜா மட்டும் சாமானியமா? ஒண்ணும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம் என்று பதிலடி தந்தார்.

மொத பாலையே சிக்ஸருக்கு தூக்கிட்டமே என்று சந்தோஷப்படுவதற்குள், பவுண்டரியில் கேச்சாகிவிட்டது பால். செய்தது இப்படை வெல்லும் படத்தின் இயக்குனர் கவுரவ். ஹெச்.ராஜா சார் தங்களுடைய விளம்பரப்படுத்துதலுக்கு நன்றி. எங்களுடைய முழு குழுவும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. கலக்குங்க சார். கவுத்துறாதீங்க என்று பதிலடி தந்திருக்கிறார்.

ஹெச்.ராஜா எது சொன்னாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் முதல் சினிமா கிரியேட்டர்கள்வரை குஷியாகிவிடுகிறார்கள். ஏன் அப்படி? ஹெச்.ராஜா சொல்வதெல்லாம் பொய்கள், உயர்வு நவிர்ச்சிகள். அண்டப்புளுகையும் அசராமல் சொல்லும்போது அதை நகைச்சுவையாகத்தானே எதிர்கொள்ள முடியும்.

எவரெஸ்டை எடுத்து தோளில் வைத்தேன் என்பவரிடம் லாஜிக்காக பேசி என்னவாகப் போகுது?

இதையும் படியுங்கள் : உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்