ஹெச்பி(HP) நிறுவனம், அதன் ஓமன்(OMEN) 15 லேப்டாப்பை புதிய அப்டேட்டுகளுடன் வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய லேப்டாப்பில் ஹார்ட்வேர் மட்டுமன்றி வடிவமைப்பிலும் பல மாற்றங்களுடன் வெளிவந்திருக்கிறது. ஓமன் 15, லேப்டாப் மொத்தத்தில் மெல்லியதாக சிறிய பெசல்ஸ் (bezels) உடன் வந்திருக்கிறது.

c05335675_1750x1285

8 வது தலைமுறை Intel Core i6+ மற்றும் Intel Core i7 ஆகிய ப்ராசஸர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. Nvidia GeForce GTX 1070 உடன் Max-Q GPU ஆகிய தொழில்நுட்ப வசதிகள் இந்த புதிய லேப்டாப்பில் உள்ளது. இந்த லேப்டாப் அப்டேட்களுடன், கேமிங்கிற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் ஹெட்செட், கீபோர்டு, மௌசு மற்றும் பை ஆகியவையும் வெளியிடப்பட உள்ளன.

1496775163_hp_accessories

கடந்த வருடம் வெளியான ஓமன் லேப்டாப்பை போலவே தான் இந்த லேப்டாப்பிலும் டிசைன் உள்ளது. அதில் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.ஆனால், தற்போது வெளியாகியுள்ள லேப்டாப் வெறும் 2.4 கிலோ தான் எடையைக் கொண்டு உள்ளது. லேப்டாப் சூடாவதை தணிப்பதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட ஃபேன்களை விட தற்போது பெரிய ஃபேன்கள் அட்டேச் செய்யப்பட்டு உள்ளன. 15.6 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேவில் ஜி-சின்க் தொழில்நுட்பமும் வேர்ச்சுவல் ரியலிரி (VR ready) தயாராகவும் சேர்ந்து வருகிறது. இது 4K அளவிலான காட்சிகளை காண்பிக்கும் திறன் கொண்டது.

40352567_3093575357

இதன் விலை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. இருப்பினும் $ 979.99 (சுமார் ரூ 66.100). ஜி.டி.எக்ஸ் 1070 மேக்ஸ்-கே ஜி.பீ.யூ மற்றும் 4 k திரையுடன் கூடிய மாடல் உங்களுக்கு $ 1,699 (சுமார் ரூ. 114,500) ரூபாய்கும் கிடைக்கும் எனத் தெரிகிறது.

இதையும் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here