இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் 2021 ஹெக்டார் பிளஸ் 7 சீட்டர் வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் ஹெக்டர் ப்ளஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வந்தது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 7 சீட்டர் வேரியண்ட் 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் யூனிட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 115 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
2.0 லிட்டர் டீசல் யூனிட் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல்கியர்பாக்ஸ், ஆப்ஷனல் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் பெட்ரோல்என்ஜின் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வசதியுடன் கிடைக்கிறது.

புதிய ஹெக்டார் பிளஸ் 7 சீட்டர் துவக்க விலை ரூ. 13,34,800, எக்ஸ்-ஷோரூம் எனது வங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18,32,800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எம்ஜி ஹெக்டார் பிளஸ் 6 சீட்டர் துவக்க விலை ரூ. 15,99,800 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19,12,800 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
6 சீட்டர் வேரியண்ட் 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோ டிம்மிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
