ஹூவாய் மேட் எக்ஸ்2 : விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியது

Huawei Mate X2 may come with 120Hz refresh rate foldable display

0
79

ஹூவாய் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதில் ஒரு மாடல் மேட்எக்ஸ்2 (Huawei Mate X2)என்றும் மற்றொரு ஹூவாய் ஸ்மார்ட்போன் CDL-AN50 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. 

சீனாவின் TENAA சான்றளிக்கும் தளத்தில் இரு மாடல்களும்  லீக் ஆகி இருக்கிறது. மேட் எக்ஸ்2 விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், CDL-AN50 மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது. மேட்எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்பதால் முந்தைய மாடலை விட சிறப்பான ஹின்ஜ் டிசைன், மேம்பட்ட ஹார்டுவேர் வழங்கப்படலாம் என தெரிகிறது.

முன்னதாக வெளியான தகவல்களின் படி மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 8.3 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெசல்யூஷன், கிரின் 9000 சிப்செட், 5ஜி வசதி, Hi1105, வைபை 6, ப்ளூடூத் 5.1, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் சார்ந்த EMUI 11, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் OLED பேனல், டூயல் கார்டுஸ்லாட், அதிக ரெசல்யூஷன் செல்பி கேமரா, 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 3900 எம்ஏஹெச்பேட்டரி வழங்கப்படு இருக்கிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here