ஹூவாய் நிறுவனம் டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா சென்சார் கொண்ட ஹூவாய் நோவா 4 ஸ்மார்ட்போனின் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. டீசரில் இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா சென்சார் ஸ்மார்ட்போனின் இடதுபுற ஓரமாக பொருத்தப்பட்டு இருப்பது தெரிகிறது. டிஸ்ப்ளேவில் சிறிய துளை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் நிறுவனமாக ஹூவாய் இருக்கும்.

Ds9w7dqXcAAtIiQ

தற்போதைய ஸ்மார்ட்போன்களில் பிரபலமாக இருக்கும் நாட்ச் டிஸ்ப்ளேவிற்கு மாற்றாக, டிஸ்ப்ளேவில் சிறிய துளையிட்டு அதில் செல்ஃபி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது.

ஹூவாய் நோவா 4 மாடலில் கேமராவிற்கான துளை வெறும் 4.5 எம்.எம். அளவு கொண்டிருக்கும் என்றும், இதில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன் மற்றும் 92% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும். டீசரில் ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல் கீழ்புறமாக காணப்படுகிறது.

ஹூவாய் நோவா 4 ஸ்மார்ட்போனில் கிரின் 980 சிப்செட், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

DtgdshNUwAAk6Lh

ஹூவாய் போன்றே சாம்சங் நிறுவனமும் டிஸ்ப்ளேவில் துளை கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பது தெரிகிறது.

ஹூவாய் நோவா 4 ஸ்மார்ட்போன் டிசம்பர் 17ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என ஹூவாய் அறிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்