ஹூவாய் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ரொயோலோ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் பிளெக்ஸ்பை என்ற பெயரில் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பின் தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு இருக்கும் என்பதை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில், ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹூவாய் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஹூவாயின் மடிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாகவும் இருக்கும் என மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஹூவாய் நுகர்வோர் வியாபாரக் குழு தலைவர் வால்டர் ஜி ”ஐரோப்பியர்களுக்கு 5ஜி சேவைகள் அதிவேகமாக வழங்குவதில் ஐரோப்பியா தீவிரம் காட்டுவதாக தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.

DeVyJ5FVwAAyz9kff

மேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வடிவமைப்பிற்கு ஏற்ற வகையில் புதிய பேட்டரி மற்றும் போட்டோ தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஹூவாய் அதிகளவில் முதலீடு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆய்வு மற்றும் உற்பத்தி துறையில் முதலீடு செய்யும் மிகப்பெரும் தனியார் நிறுவனமாக ஹூவாய் இருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூவாய் நிறுவனம் சுமார் 1300 முதல் 1800 கோடி யூரோக்களை முதலீடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூவாயின் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பெயர் குறித்த எவ்வித தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

எனினும், ஹூவாய் மடிக்கக்கூடிய சாதனம் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என பேங் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here