ஹூண்டாய் வெர்னா இ மாடல் இந்தியாவில் வெளியானது

The Hyundai Verna has gotten a little more affordable for someone looking for a sedan under the Rs 10 lakh bracket. Here’s how the new Verna E variant makes it possible.

0
86

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வெர்னா மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

இ என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள ஹூண்டாய் வெர்னாவின் புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.02 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வேரியண்ட்டில் மட்டும்தான் பெட்ரோல் என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படவுள்ளது.

புதிய பேஸ் மாடல் விலை முந்தைய வெர்னா ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 36 ஆயிரம் வரை குறைவு ஆகும். புதிய மாடலில் முந்தைய ஸ்டான்டர்டு வெர்னாவில் வழங்கப்பட்ட சில அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன. 

hyundai-verna-facelift-left-side5 hyundai-verna-facelift-right-front-three-quarter4 hyundai-verna-right-front-three-quarter7

அந்த வகையில் புதிய வெர்னா இ மாடலில் ஷார்க் பின் ஆன்டெனா, சன் கிளாஸ் ஹோல்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இத்துடன் ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்படவில்லை.

ஹூண்டாய் வெர்னா இ மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இது 114 பிஹெச்பி பவர், 144 என்எம் டார்க் செயல் திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் வெர்னா இ மாடல் அறிமுகத்தால் ஹூண்டாய் வெர்னாவிற்கு இதுவரை முக்கிய போட்டியாளராக விளங்கி வந்த நான்காம் தலைமுறை மற்றும் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடானின் விற்பனை போட்டி தவிர்க்கப்பட்டுள்ளது.

ஏனெனில் ஹோண்டா சிட்டியை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.27 ஆயிரத்தில் இருந்து ரூ.1.8 லட்சம் வரையிலான மலிவானகாராக ஹூண்டாய் வெர்னா மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here