ஹுவாய்(HUAWEI ) நிறுவனத்தின் நோவா 3i(HUAWEI nova 3i) பற்றிய விபரங்களை ஏற்கனவே நாம் தளத்தில் விரிவாகப் பார்த்துவிட்ட நிலையில், தற்போது நோவா 3i(HUAWEI nova 3i) இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

இந்த நோவா 3i(HUAWEI nova 3i) 6.3” முழு எச்டி திரை கொண்ட டிஸ்ப்ளே, HiSilicon Kirin 710SoC, EMUI 8.2 (ஓரியோ 8.1), செயற்கை நுண்ணறிவுகொண்ட சீன் ரெகக்னிசன் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

டூயல் சிம் (நானோ), VoLTE, 4ஜிபி ரேம், 128 ஜிபி உள்ளடங்கிய நினைவகம். 6.3” முழு எச்டி திரை கொண்ட டிஸ்ப்ளே (1080*2340 பிக்சல்கள்), HiSilicon Kirin 710SoC, EMUI 8.2 (ஓரியோ 8.1)இயங்கு தளத்துடன் வருகிறது.

கேமராவைப் பொறுத்த வரை, பின்புறத்தில் இரட்டை கேமராக்கள் (16mp, 2mp), எல்ஈடி ஃப்ளாஷ். முன்பக்கத்திலும் இரட்டை கேமராவையும் (24mp, 2mp) கொண்டுள்ளது.
மேலும் நோவா 3i ஸ்மார்ட்போனில் கூடுதல் மெமரி கார்டு மூலம் 256 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளலாம். 4ஜி VoLTE, 802.11ac வைபை, ப்ளூடூத் v4.2, LE, GPS/A-GPS, GLONASS & USB 2.0 ஆகிய கனக்டிவிட்டி வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அக்சலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், டிஜிட்டல் காம்ப்பஸ், சுழல்காட்டி(gyrometer), ப்ராக்சிமிட்டி சென்சார் (proximity sensor) போன்ற அம்சங்களும் உள்ளன. 3340 mAh பேட்டரியுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

இந்தியாவில் நோவா 3i ஸ்மார்ட்போன் ரூ 20,990 கிடைக்கும். கருப்பு மற்றும் பர்ப்பிள் வண்ணங்களில் கிடைக்கிறது.

அமேசான் இந்தியா மூலமாக ஆகஸ்ட் 23 அன்று இது இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதனை ஏற்கனவே புக் செய்தவர்களுக்கு அமேசான் 1000ரூபாய் சலுகை அளிக்கிறது. மேலும் எக்ஸ்சேஞ்ச், கூடுதல் கட்டணமில்லா மாதத் தவணைச் சலுகைகள், ஜியோவின் 1200ரூபாய் கேஷ்பேக், 100ஜிபி கூடுதல் டேட்டா ஆகிய சலுகைகளையும் அமேசான் இந்தியா தளத்தில் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here