ஹுண்டாய் நிறுவனம் சான்ட்ரோவின் புதிய மாடலக தனது புதிய AH2 மாடல் காரை அக்டோபர் 23-ம் தேதி விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த காரை ஹுண்டாய் நிறுவனம் அக்டோப்ர் 9-ம் தேதி அறிமுகப்படுத்தும். கிராண்ட் ஐ10 காருக்கு கீழ், இயான் காருக்கு மாற்றாக இந்த கார் அறிமுகப்படுத்த உள்ளது ஹுண்டாய். மாருதி சுசூக்கி ஆல்டோ கே10 மற்றும் ரெனோ க்விட் கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இன்ஜின் பற்றி எந்த தகவலும் இது வரை வெளியாகவில்லை. கியரைப் பொறுத்த வரை ஆட்டோமேட்டிக் கியருடன்,5 ஸ்பீட் மேனுவல் கியரும் இதில் இருக்கும் எனத் தெரிகிறது.

835hen5s_hyundai-santro-(ah2)-design-sketch_625x300_16_August_18

இந்த காரின் ஸ்கெட்ச்சை ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது ஹுண்டாய். ஹுண்டாய் வெளியிட்ட ஸ்கெட்ச்சை பார்க்கும் போது, மேல் தளம் சரிவுடன், காம்பேக்ட் காராக தெரிகிறது. மேலும், ஸ்டைலான ஹெட்லாம்ப், ஃபாக் லேம்பும் பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்டான வீலும் கொடுக்கப்பட்டுள்ளது.

tibytgtbvnwq_800

AH2 மாடலில் கேஸ்கேடிங் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. கார்களின் வீல்கள் அனைத்தும் ஸ்டீலால் ஆனதாகவே இருந்தது. அதனால், இந்த காரில் அலாய் வீல் இடம்பெறமா என்பது சந்தேகமே.

2018-Hyundai-Santro-Launch-Details

இன்டீரியர் கலர் பெய்ஜ் மற்றும் கருப்பு நிற கொடுக்கப்பட்டுள்ளது. ஆடியோ கன்ட்ரோலுடன் கூடிய மூன்று ஸ்போக் ஸ்டீரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்