பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் ஹிந்து மற்றும் ஹிந்துத்வவாதிக்கு இடையிலான வேறுபாடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் சனிக்கிழமை விளக்கமளித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் பேசியதாவது – 

“நாட்டில் ஹிந்து மதம் குறித்து நிறைய பேசப்படுகிறது. ஹிந்து மற்றும் ஹிந்துத்வவாதிக்கு இடையிலான போராட்டம்தான் இன்று இந்தியாவில் உள்ளது.

ஒருபக்கம் ஹிந்துக்கள், உண்மைப் பாதையைத் தேர்ந்தெடுப்பர். இன்னொரு பக்கம் ஹிந்துத்வவாதிகள் வெறுப்பைப் பரப்பி அதிகாரத்தைப் பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஹிந்துத்வவாதி கங்கையில் தனியாக நீராடுவான். அதுவே ஒரு ஹிந்து கங்கையில் கோடிக்கணக்கானவர்களுடன் நீராடுவான்.

இதையும் படியுங்கள்:👇

ஒரு ஹிந்து உண்மையைக் கண்டறிந்து, புரிந்துகொண்டு, உண்மைக்காகப் போராடுவதற்காகவே தனது வாழ்நாளை செலவிடுவான். ஹிந்து தனது அச்சத்தை எதிர்கொள்வான். அதை வெறுப்பாகவோ, கோபமாகவோ அல்லது வன்முறையாகவோ மாற்ற மாட்டான். 

அதுவே ஒரு ஹிந்துத்வவாதி பொய் அரசியலில் ஈடுபடுவான். உண்மைக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை. அதிகாரத்தைக் கைப்பற்ற பொய்யைப் பயன்படுத்துவான். 

நரேந்திர மோடி தன்னை ஹிந்து என்கிறார். அவர் என்றைக்கு உண்மையைப் பாதுகாத்திருக்கிறார். அவர் ஹிந்துவா ஹிந்துத்வவாதியா? என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here