ஹிந்தியில் படுதோல்வியைத் தழுவிய தலைவரின் தர்பார்

0
915

ரஜினிகாந்த் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வாரம் 9 ஆம் தேதி வெளிவந்த படம் ‘தர்பார்’. தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியான இப்படம் இரண்டாவது வாரத்தில் உலகம் முழுக்க 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இப்படம் ஹிந்தியில் படுதோல்வி அடைந்துள்ளது. அங்கு வெளியான நாள் முதல், மொத்தமாக ரூ.5.5 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக விநியோகஸ்தர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படம் பற்றி பெரிய அளவில் மக்களிடம் புரொமோஷன் செய்யப்படாததும் தோல்விக்கு ஒரு காரணமாக சொல்கிறார்கள். மேலும் ஹிந்தியில் வெளியாகி உள்ள அஜய் தேவ்கனின் ‛தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ படம் ரசிகர்கள் மத்தியில்மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதும் இப்படத்தின் மிகப்பெரிய தோல்விக்குக் காரணம் எனத்தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here