ஒரு வருடத்துக்கு முன்னால் தனுஸ்ரீ தத்தா என்றால் பலருக்கும் தெரியாது. இந்தி நடிகை. தமிழில் தீராத விளையாட்டுபிள்ளை என்ற ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்துள்ளார். தெரிய வாய்ப்பில்லை.

நடிப்பிலிருந்து விலகி வெளிநாட்டில் பல வருடங்கள் வசித்தபின் சென்ற வருடம் நானா படேகர் மீது மீ2 என பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த சர்ச்சை அவரை பிரபலப்படுத்தியது. இப்போது தனுஸ்ரீ தத்தாவின் ஜாதகம் அனைவருக்கும் அத்துபடி.

வரும் 16 ஆம் தேதி தனுஸ்ரீ தத்தா அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பிசினஸ் ஸ்கூல் பிரிவின் அழைப்பின் பே ரில் தனுஸ்ரீ தத்தா அங்கு உரையாற்றுகிறார். சென்ற வருடம் நடிகர் கமல்ஹாசன் உரையாற்றினார். தனுஸ்ரீ தத்தாவின் உரையில் மீ2 இடம்பெறுமா… பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here