வருடத்துக்கு ஒரு படம் செய்தால் ஆச்சரியம். அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது ஹாரிஸ் ஜெயராஜின் இசை வண்டி. கேட்ட மாதிரி இருக்கு என்று கமெண்ட் செய்தாலும், மீண்டும் மீண்டும் கேட்கிற மாதிரி பாடல் போடுகிறவர் என்பதால் அவரது பாடலுக்கு எப்போதும் ரசிகர்கள் வெயிட்டிங்.

கார்த்தி நடித்திருக்கும் தேவ் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை. முதல் சிங்கிள் டிசம்பர் 14 வெளியாகும் என்று அறிவித்துள்ளார் ஹாரிஸ். ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகலாம்.

தேவ் படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார். கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர். உக்ரைன் உள்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்