ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தனது v20 சிறப்பம்சங்கள், மாடலின் விலை, உள்ளிட்ட தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது.

ஹானர் v20 ஸ்மார்ட்போனில் 48மெகா பிக்செல்ஸ் சோனி கேமரா, ஹைசிலிகான் கிரின் 980, 25 மெகா பிக்செல்ஸ் செல்பி ஸ்நாப்பர் 4,000 mAh பேட்டரி மற்றும் டர்போ டெக்னாலஜி ஆகியவை சிறப்பைச் சேர்க்கின்றன. வரும் ஜனவரி 22ஆம் தேதி பாரீஸில் இந்த போன் வெளியாகிறது.

ஹோல் பன்ச் செல்பி கேமரா சென்சார் போனின் இடதுபுறம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனின் அமைப்பு கிளாஸி கிரேடியண்ட் பினிஷிங்-குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் டூயல் கேமரா செட்டப், கைரேகை சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

201812260188591kiex693

ஹானர் v20 சிறப்பம்சங்கள் :
டூயல் சிம் கொண்ட ஹானர் v20 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9.0 பை OS-ல் இயங்குகிறது. இது 6.4-இன்ச் புல் எச்டி + (1080×2310 பிக்செல்ஸ்) டிஎப்டி டிஸ்பிளே 19.5:9 அக்செப்ட் ரேசியோ, 16.7 மில்லியன் கலர்கள் கொண்டுள்ளது.

மேலும் ஆக்டோ கோர் ஹைசிலிகான் கிரின் 980 பிராசஸருடன் 8ஜிபி மற்றும் 6ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் மெமரி 128ஜிபி மற்றும் 256ஜிபி ஆகிய வெரியண்டுகளில் கிடைக்கிறது. இதில் மைக்ரோ Sd கார்ட் சப்போர்ட் கிடையாது.

maxresdefault

ஹானர் v20 கேமரா சிறப்புகள் :

ஹானர் v20 ஸ்மார்ட்போனில், 48 மெகா பிக்ஸெல்ஸ் சோனி IMX586 சென்சாருடன் f/1.8 அப்பர்ச்சர், 960fps ஸ்லோ மோஷன் வீடியோ ரெகார்டிங் சப்போர்ட், எச்டிஆர், எல்இடி பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 25 மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்டுள்ளது.

ஹானர் v20 விலை விபரம் :

ஹானர் v20 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட போனின் விலையானது CNY 2,999 (தோராயமாக ரூ.30,400) ஆகும். 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரியுடன் வரும் போனின் விலையானது CNY 3,499 (தோராயமாக ரூ.35,500) ஆகும். மேலும் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்ட போனின் விலையானது CNY 3,999 (தோராயமாக ரூ.40,600) ஆகும்.

இந்த போன் ப்ளூ, ரெட், மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போனை தொடர்ந்து, இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளேயுடன் வெளிவரும் இரண்டாவது ஸ்மார்ட்போனாகும். ஹோல் பன்ச் செல்பி கேமராவுடன், ஹூவாய் நோவா 4 டூயல் கேமராவுடன் வெளிவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here