honor-20-pro
honor-20-pro

மே 21 ஆம் தேதி, ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட் போன் உலக அளவில் வெளியாக உள்ளது.  ஹானர் 20 ப்ரோ-வின் பின்புறத்தில் 4 கேமராக்கள் இருக்கும் எனத் தெரிகிறது. அதேபோல பின்புற பேனலில் க்ரேடியன்ட் ஃப்னிஷ் இருக்கும் என்றும் தெரிகிறது. முன்னதாக ஹானர் 20 ப்ரோ குறித்து லீக் ஆன ஒரு புகைப்படத்தில், பின்புறத்தில் 3 கேமராக்கள்தான் இருந்தன. தற்போது லீக் ஆகியுள்ள இந்தப் படத்தில் போனின் பின்புறத்தில் 4 கேமராக்கள் இருப்பது தெளிவாக தெரிகிறது. 

இந்தப் படம் உண்மையிலேயே ஹானர் 20 ப்ரோ போனுடையதா என்பது தெரியவில்லை. ஆனால், பின்புறத்தில் இருக்கும் முதன்மை கேமரா சென்சார், முன்னதாக ஹூவேய் P30 ப்ரோ -வில் இருந்தது போல பெரிஸ்கோப் சென்சார் என்பது தெரிகிறது. அதேபோல ஹானர் 20 ப்ரோ-வில் 48 மெகா பிக்சல் கொண்ட ஒரு கேமராவும் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனி IMX600 இமேஜ் சென்சாரை இதற்காக ஹானர் 20 ப்ரோ-வில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூடுதல் தகவல் கூறப்படுகிறது. 

இவையல்லாமல் போனில் 20 மெகா பிக்சல் வைட்-ஆங்கில் லென்ஸ், 8 மெகா பிக்சல் டெலி போட்டோ லென்ஸ் மற்றும் ToF கேமரா ஆகியவை இருக்கலாம்.

மற்றப்படி ஹானர் 20 ப்ரோ குறித்து இதுவரை நமக்குக் கிடைத்த தகவல்படி, க்ரின் 980 எஸ்.ஓ.சி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வசதி, 3,650 எம்.ஏ.எச் பேட்டரி, 22.5w ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கக்கூடும். இதைத் தவிர கேமிங்+, லிங்க் டர்போ, GPU டர்போ உள்ளிட்ட வசதிகளையும் ஹானர் 20 ப்ரோ-வில் இருக்கலாம். இந்த போனின் விலை 31,100 ரூபாயிலிருந்து ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் போன்களுடன் ஹானர் 20 ப்ரோ மே 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here