ஹுவாய் நிருவனம் தனது புதிய ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் தனது மிகபெரிய ஹோல் பஞ்ச் செல்ஃபி கேமரா மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அண்டிராய் பையில் இயங்குதளம் மற்றும் 6.4 இஞ்ச் ஃபுல் எச்டீ ஸ்கீரின் கொண்டது. 48 மெகா பிக்சல் கேமரா, சோனி நிறுவனத்தின் IMX586 சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. 960fps ஸ்லோ மோஷன் வீடியோக்களை எடுக்கும் வசதியும் இதில் அடங்கும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மற்றும் 256 ஜிபி மெமரி என இரு வெரியண்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகுகிறது.இதில் 4,000 mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹானர் வியூ 20 போன் சீனாவில் கடந்த மாதம் ஹானர் வி20 உடன் வெளியிடப்பட்டது. மேலும் இந்நிறுவனம் ஹானர் பேண்ட் 4 (ரன்னிங்க எடிஷன்) மற்றும் ஹானரின் வாட்ச் மேஜிக் என தனது இரண்டு புதிய தயாரிப்புக்களையும் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

ஹானர் வியூ 20யின் விலை, 6ஜிபி ரேம்/128 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.45,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் 6ஜிபி ரேம்/256 ஜிபி மெமரியுடன் வரும் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் ரூ.45,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பான்டம் புளூ, மிட்நைட் பிளாக் மற்றும் சாப்பையர் புளூ போன்ற நிறங்களில் வெளியாகுகிறது.

ஆனால் தற்போது 6ஜிபி ரேம்/128 ஜிபி மெமரி கொண்ட மிட்நைட் பிளாக் மற்றும் சாப்பையர் புளூ மாடல்கள் மட்டுமே ஹானர் ஹைய் ஸ்டோரில் வெளியாகிவுள்ளது. அறிமுக சேலில் அமேசான் சார்பாக வட்டியில்லா தவணை முறையும் ஜசிஜசிஜ கிரெடிட் கார்ட் மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதலாக 5% தள்ளளுபடியும் கிடைக்கும்.

மேலும் ஜியோ ஆஃபரில் 2,200 ரூபாய் கேஷ்பேக்கும் 2.2 டிபி டேட்டாவும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுபோல் பேடிஎம் கேஷ்பேக் ஆப்பராக ரூ.1,400 வரை கேஷ்பேக் சலுகை கிடைக்க வாய்புள்ளது. அதுபோல மேபிகிவிக் நிறுவனம் சார்பாக ரூ. 15,000 கேஷ்பேக் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் அமேசான் இந்தியா மற்றும் ஹைய் ஹானர் ஸ்டோர்களில் இந்த புதிய ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் ரூ.37,999 க்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here