சீனாவின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ஹாங்காங் ஜனநாயக போராட்டங்களுக்கு ஆதரவான மசோதாவில் கையெழுத்திட்டார்.

இந்த மசோதா சட்டமானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹாங்காங்கில் மனித உரிமைகளை மீறுவோர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அமரிக்காவில் நுழைய தடை விதிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

சீன அதிபர் சீ ஜின்பிங் மீதுள்ள மதிப்பை கடந்து இந்த மசோதாவில் தாம் கையெழுத்திட்டதாக கூறிய அதிபர் டிரம்ப், சீன தலைவர்களும் ஹாங்காங் ஜனநாயக பிரதிநிதிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதார்.

இதனிடையே பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதர் டெர்ரி பிரான்ஸ்தத்தை அழைத்து கண்டனம் தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here