ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை குறைக்கும் விவகாரம்: சீனாவைக் கடுப்பேற்றும் இங்கிலாந்து

The UK has set itself on a collision course with China after broadening its offer on extended visa rights from 350,000 to almost 3m Hong Kong residents.

0
140

இங்கிலாந்தின் காலணி ஆதிக்க கீழ் இருந்து வந்த ஹாங்காங் 1997 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் படி சீனாவுடன் இணைந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் படி சீனா, ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என பிரிட்டன் கேட்டுக்கொண்டது. இதனால் தன்னுடன் இணைந்த ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ள சீனா பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்நிலையில், ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய தேசியபாதுகாப்புச் சட்டங்களை சீனா அமுல்படுத்தும் நிலையில், ஹாங்காகங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தின்  இந்த முடிவு சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஒரு சட்டத்தைச் சீனா கொண்டு வந்தது. அதன்படி, ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரைச் சீனாவுக்குக் கடத்தி விசாரிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது.

மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தியதால் இதை தற்காலிகமாக அந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நேரத்தில் சீனா அரசு சத்தமில்லாமல் ஹாங்காங் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது.

இந்த தேசிய பாதுகாப்புச் சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் தொடர் போராட்டங்கள் வலுத்துள்ளன. சீனாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன்,கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சீனாவின் இந்த செயலுக்கு பதிலடி தரும்வகையில், இங்கிலாந்து சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹாங்காங் நாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. 

ஹாங்காங் மக்களுக்கான சிறப்பு இங்கிலாந்தின் பாஸ்போர்ட் என்பது, ஹாங்காங் சீனாவுடன் இணைவதற்கு முன்பான காலகட்டங்களில் பிரிட்டன் ஹாங்காங் மக்களுக்கு வழங்கிய பாஸ்போர்ட். அதாவது1997 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஹாங்காங் மக்களுக்கு இங்கிலாந்து வழங்கியிருந்து. இந்த பாஸ்போர்டை தற்போது3,00,000க்கும் அதிகமான ஹாங்காங்கில் வசிப்போர் வைத்துள்ளனர். இந்த பாஸ்போர்ட் மூலம் பிரிட்டன் பயணம் செய்பவர்களுக்கு ஆறுமாதம் வரை அங்கு தங்க விசா தேவையில்லை. 

ஆகவே, சீனா அவர்களை ஒடுக்க முயலும் நேரத்தில், தன் குடிமக்கள் என்ற முறையில், அவர்கள் மீதான அக்கறையால், இங்கிலாந்து சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி,350,000 வெளிநாடு வாழ் 
ஹாங்காங் மக்களுக்கான விசா உரிமைகளை நீட்டிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இது குறித்துப் பேசிய வெளியுறவுச் செயலர் டொமினி க்ராப்,  சீனா இந்த சர்ச்சைக்குறிய தேசிய பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால், பிரட்டிஷ் சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹாங்காங் மக்கள் 6 மாதத்திற்கு பதிலாக 12 மாதங்கள் வரை விசா இல்லாமல் இங்கிலாந்தில் தங்க அனுமதிப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெற அனுமதிப்பதோடு வரும்காலங்களில் அவர்களுக்கு குடியுரிமை வழங்கவும் வழிவகை செய்வோம் என தெரிவித்துள்ளார்.

ஆனால், இன்னொரு பக்கம், புலம் பெயர்தலை கட்டுப்படுத்துவதற்காக நீண்ட காலம் போராடி, இப்போதுதான் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டுவெளியே கொண்டு வந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினர், பல்லாயிரக்கணக்கான ஹாங்காங் குடிமக்கள் இங்கிலாந்திற்குள் வருவதை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here