ஹவுஸ் அரெஸ்டில் ரஜினியின் நண்பர்

0
152

ரஜினியின் நெருங்கிய நண்பரும், தெலுங்குசினிமாவின் முன்னணி நடிகருமான மோகன் பாபுவை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

மோகன் பாபு, பாலகிருஷ்ணா போன்று தெலுங்கு சினிமாவில் சிலர் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு இணையாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை ஆட்டுவிப்பவர்கள். இவர்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர்களால் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைப்பது கடினம். மோகன் பாபு ரஜினியின் நெருங்கிய நண்பர். நெருங்கிய என்றால் வாடா, போடா என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம். தனது இரு மகன்களில் ஒருவரையேனும் ரஜினிவீட்டு மருமகனாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக மோகன் பாபுவே கூறியிருந்தார். ரஜினி மகள்களின் காதல் காரணமாக அது நிறைவேறவில்லை.

மோகன் பாபுக்கு திருப்பதில் ஸ்ரீ வித்யநிகேதன் என்ஜினியரிங் கல்லூரி உள்ளது. ஆளும் தெலுங்குதேச கட்சி கட்டணத்தை உயர்த்தியதால் இன்று (மார்ச் 22) மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப் போவதாக மோகன் பாபு அறிவித்திருந்தார். அவர் களத்தில் இறங்கினால் மாணவர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மோகன் பாபு ரசிகர்களும் போராட்டத்தில் இணைந்து கொள்வார்கள். ஆந்திராவின் சென்சேஷனல் பிரச்சனையாக இது மாறும். மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மோகன் பாபுவின் போராட்டம் ஆளும் தெலுங்குதேச கட்சிக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, போராட்டத்தை முடக்கும் நோக்கத்தில் இன்று அதிகாலையே ஏராளமான போலீசார் கல்லூரி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மோகன் பாபு வீட்டைவிட்டு வெளியே வராதவண்ணம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது இளைய மகன் மனோஜ் மஞ்சு போராட்டத்தை முன்னின்று நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்றைய காலை நிலவரம்.

மோகன் பாபு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பிரச்சனை எதிர்பார்த்ததைவிட பெரிதாகும் என்கிறார்கள் ஆந்திராவில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here