ஹரியானாவில் 120 பெண்களை பலாத்காரம் செய்த மடாதிபதி பாபா அமர்பூரி கைது

0
392

ஹரியானாவில் 120 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக மடாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானாவின் ஃபடேஹாபாத்தில் பாபா பாலக்நாத் கோயிலின் மடாதிபதி பாபா அமர்பூரி. இவர் பெண்களை பலாத்காரம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரது வசிப்பிடத்தில் போலீசார் அதிரடியாக சோதனை செய்த போது, கிட்டத்தட்ட 120 பெண்களை தனித் தனியாக பாபா அமர்பூரி பலாத்காரம் செய்த போது எடுக்கப்பட்ட 120 வீடியோக் காட்சிகளையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழிபட வரும் பெண்களை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, அவர்களை மிரட்டி மீண்டும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

ஏற்கெனவே இதே போன்றதொரு வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிக்கிய நிலையில் மீண்டும் அதிக பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் மற்றொரு சாமியார் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்