பெண்களைமையமாக வைத்து இயக்கப்படும் தமிழ்ப்படம் ஒன்றில் ஹன்சிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது. இதற்குமுன்னர்  விஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி  போன்றோர் பெண்களைமையமாக வைத்து  உருவாக்கப்பட்ட கதையில் நடித்து பிரபலமானர்கள். அத்திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும்  வெற்றிபெற்றன. 

இந்நிலையில் , யோகிபாபு நடித்து சமீபத்தில் வெற்றி பெற்ற ‘தர்மபிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ்    P.ரங்கநாதன் பிரமாண்டமாக தயாரிக்கும்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். ஹாரர் , காமெடி ,பேய்ப்படமாக   அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இக்கதையை  அமைத்துள்ளார்கள்.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய வேடத்தில் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். அவர் இத்திரைப்படத்தில் -நெகடிவ் கேரக்டரில்நடிக்கிறார். இவர் ஏற்கனவே 2017ஆம் ஆண்டு வெளியான டீம்5 என்ற ஒரு படத்தில்  கதாநாயகனாக நடித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை இரட்டையர்களான ஹரி -ஹரிஷ் இயக்குகிறார்கள்  சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான இவர்கள் ஏற்கனவே  ‘அம்புலி’ ,  ‘ ‘ ‘அ ‘(AAAH),  ‘ஜம்புலிங்கம்’  போன்ற படங்களை இயக்கியுள்ளார்கள் .
 
டிசம்பர் மாதம் துவங்கும் இப்படத்தை 2020 கோடை விடுமுறை நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here