ஹஜ் மானியம் ரத்து என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியா்கள் புனித பயணமாக மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு மானியம் அளித்து வந்தது. இந்த ஆண்டு 1.75 லட்சம் இஸ்லாமியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள பதிவு செய்திருந்தனா். இந்நிலையில், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசு, 700 கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்றும், இந்தத் தொகையை சிறுபான்மையின பெண்கள் கல்விக்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, ”இதனை ஏற்க இயலாது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தை, ஏழைகளால் மேற்கொள்ள முடியவில்லை என்பதால்தான் மானியம் தேவைப்படுகிறது. பெண்களின் கல்விக்கு இந்த மானியத்தை ரத்து செய்துதான் செய்ய வேண்டும் என்றில்லை” எனக் கூறியுள்ளார். இது ஒரு ஏமாற்று வேலை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்