ஸ்ரீ ராமர் அவதரித்த திருநாள் ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.

ராமர் அவதரித்த வரலாறு :

அயோத்தியா மன்னன் தசரதனுக்கு கோசலை, கைகேயி , சுமித்திரை என மூன்று மனைவிகள். மூவருக்கும் குழந்தை இல்லை. அரசாள குழந்தை இல்லையே என வருந்திய பொழுது வசிஷ்ட மகாமுனி அவர்கள் ஆலோசனைப்படி புத்திர யாகம் நடத்தினார். அதன் பலனாக யாகத்தில் இருந்து வந்த யக்னேஸ்வரன்  பிரசாதம் தந்து மூவருக்கும் பிரித்து தர சொல்கிறார் .  சக்ரவர்த்தியும் மூன்று பாகமாக பிரித்து தருகிறார். அதை உண்ட மனைவிகள் மூவருக்கும் கர்ப்பம் தரித்தது.

 பங்குனி மாத சுக்ல பட்ஷ நவமி திதியில் கோசாலைக்கு ராமரும், கைகேயிக்கு பரதனும், சுமித்ரைக்கு சத்ருகனன் மற்றும் லக்ஷ்மணனும் பிறக்கிறார்கள். இதில் விஷ்ணுவின் 7வது அவதாரம் ராமர் அவதாரம் ஆகும். இவ்வாறு நவமி திதியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் ராமர்.

ராமர் ஏன் நவமி திதியில் அவதரித்தார் ?.

அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் மக்கள் யாரும் சுப நிகழ்வுகளை நடத்த மாட்டார்கள். இதனால் இரு திதிகளும்  மனம் வாட, அவர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், மகா விஷ்ணு ராமராக நவமி திதியிலும், கிருஷ்ணராக அஷ்டமி திதியிலும் அவதரித்தார் என்பது ஐதீகம்.

இப்படி தான் ஒரு மனிதன் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் ராமர். இந்த அவதாரத்தில் அவருடைய தாரக மந்திரமாக இருந்தது ” ஒரு இல், ஒரு வில், ஒரு சொல்” ; அதன்படி வாழ்ந்தும் காட்டினார். மனிதர்களின் வாழ்வை உய்விக்க வந்தவர் அவர். ராமா என்ற சொன்னால் போதும் பாவங்கள் விலகும். ராமா நாமம் எழுதினால் , 108 முறையோ அல்லது 1008 முறையோ எழுதினால் , அனுமனின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ராமரை விட ராம நாமத்திற்க்கே பலன் அதிகம் . ராம நாமம் சொல்லும் இடத்தில் அனுமன் குடி இருப்பார் .
ராம நாமம் சொன்னால் வேலை கிடைக்கும், செல்வ வளம் பெருகும், குடும்ப ஒற்றுமை மேலோங்கும், தீராத நோய்கள் தீரும், மனதில் பயம் நீங்கும், மன கவலை அகலும் , லட்சுமி கடாட்சம் கிட்டும்.

ராம நாமம் சொல்வதால் ராமனின் ஆசி மட்டும் இல்லாமல் அனுமனின் ஆசியும் கிடைக்கும் ,என்பது திண்ணம்.

ராம நவமி அன்று விரதம் இருந்து ராம நாமம் சொல்லி வந்தால் ஜென்மம் கடைத்தேறும்.

ராம நாமத்தின் மஹிமையை மகா பெரியவா எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறார்கள்.  

விஸ்வாமித்ரர் அவர்கள் மரா மரா என்று சொல்லியே ராமரின் அருள் பெற்றவர். மரா மரா என்று தொடர்ந்து சொல்லும் போது ராம ராம என்று வரும்.

விரதம் இருக்கும் முறை :

ராம நவமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி தங்கள் இல்லத்தை சுத்தம் செய்து ராமரின் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து ராமர் பட்டாபிஷேக படம் அல்லது சிலை இருந்தால் அதற்கு  அலங்காரம் செய்து ராம நாமம் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லி, வெற்றிலை பாக்கு, பூ , பழம் வைத்து முக்கியமாக பழங்கள் எவ்வளவு வைக்க முடியுமோ அவ்வளவும் வைத்து, ;துளசி
மாலை அணிவித்து நிவேதனமாக பானகம் மற்றும் நீர் மோர் படைத்து வழிபட வேண்டும். முடிந்தவர்கள் அன்று முழுவதும் உண்ணாமல் பால் பழம் மட்டும்  சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்டு பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம். ராமர் பட்டாபிஷேகம் பார்த்தால் இழந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

அன்றைய தினம் நீர் மோர் தானமாக தருவது சிறப்பு.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ராம நவமி இந்த வருடம் ; ஏப்ரல் மாதம்  21 ம் தேதி புதன் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ராமரை வழிபாட்டு , ராம  நாமம் சொல்லி  , ராமர் மற்றும் அனுமனின் ஆசிகள் பெற்று வாழ்வில் வளங்கள் பல பெறுவோமாக.

நன்றி,
ஆஸ்ட்ரோ லக்ஷ்மி LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here