ஸ்ரீரெட்டி என்னும் பொய்

0
154

மீடு வை உக்கிரமாக கையாண்ட பெயர் ஸ்ரீரெட்டி. அது மீடு வாக இல்லாமல் வீடு வாக – பலர் சம்பந்தப்பட்டு இருந்ததால் ஸ்ரீரெட்டியின் புகார்கள பிசுபிசுத்தன. ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்த ஸ்ரீரெட்டியின் பொய்கள் பலரை காவு வாங்கியிருப்பது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.

ஸ்ரீரெட்டியின் புகார்கள் மற்றும் அரைநிர்வாண போராட்டம் கொடுத்த விளம்பர வெளிச்சத்தை காசாக்க நினைத்தவர் சுப்பிரமணி. சென்னையைச் சேர்ந்த இவர் ஸ்ரீரெட்டி நடிப்பில் ரெட்டி டைரி என்ற படத்தை தொடங்கினார். ஸ்ரீரெட்டி மீடியாவில் விளம்பிய படுக்கையறை ரகசியங்களை படமாக்குவதே சுப்பிரமணியின் திட்டம். ஆனால், படம் பாதியில் நின்றது. என்மீது தவறாக நடக்க முயன்றார் என்று ஸ்ரீரெட்டி தந்த புகாரில் ஹைதராபாத் போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இந்த வழக்கில் மூன்று மாதம் சிறையில் இருந்து மீண்ட சுப்பிரமணி, சென்னை வந்து தனது அக்கா மகனுடன் தன்னை சரமாரியாக தாக்கியதாக ஸ்ரீரெட்டி சில தினங்கள் முன்பு கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். சரி, சாட்சி? வீட்டிலிருந்த சிசிடிவி வயரை பிடுங்கி போட்டுவிட்டே அடித்தனர் என்றார் ஸ்ரீரெட்டி.

சுப்பிரமணியையும், அவரது அக்கா மகனையும் விசாரித்ததில் ஸ்ரீரெட்டி சொன்னது பொண் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. ஸ்ரீரெட்டியை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கிறார்கள்.

பாவம் சுப்பிரமணி. படுக்கையறை ரகசியங்களை படம் செய்யப் போய் அவரே ஒரு திரைப்படமாகி நிற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here