“ஸ்ரீதேவி போதையில் நீரில் மூழ்கி இறந்தார்”: போஸ்ட் மார்ட்டம் அறிக்கை

Actor Sridevi died of accidental drowning, says Dubai Police

0
1791

பிரபல இந்திய நடிகை ஸ்ரீதேவி, தான் தங்கியிருந்த துபை ஹோட்டலிலுள்ள குளியலறையில் போதையில் நீரில் மூழ்கி இறந்ததாக போஸ்ட் மார்ட்டம் அறிக்கை தெரிவிக்கிறது; சனிக்கிழமையன்று இரவில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு 54 வயதான ஸ்ரீதேவி மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் திங்கள் கிழமை வெளியான மருத்துவமனையின் அறிக்கைகள் அவரது மரணம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதாக தெரிவிக்கின்றன. அவருடைய ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததையும் இந்த அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.

1963இல் தமிழ்நாட்டில் பிறந்து இந்திய திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த ஸ்ரீதேவி நடிப்புத் துறையில் சிகரம் தொட்டவர்; இடையில் 15 ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து ஓய்விலிருந்தாலும் இங்கிலீஷ் விங்க்லீஷ், மாம் ஆகிய படங்களின் மூலமாக மீண்டும் மக்கள் நினைவுகளில் இடம்பிடித்தார். சனிக்கிழமையன்று இரவு (பிப்ரவரி 24) 11 மணியளவில் துபையில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ஸ்ரீதேவி உயிரிழந்தார்.

ஒக்கி: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்


ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here