ஸ்மார்ட் போன் வாங்கலையோ ஸ்மார்ட் போன்.. 999 ரூபாய் தான்..

0
484

நான்காயிரமோ அய்ந்தாயிரமோ கையில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி வைத்துக் கொண்டு பேஸ்புக்கையோ, வாட்ஆப்பையோ பார்த்துக் கொண்டே இருந்தால்தான் மதிப்பு என்றாகிவிட்டது. அதனால் பணம் இல்லாதவர்கள் கூட அடித்துபிடித்து பணத்தை சேர்த்து ஒரு ஸ்மார்ட் போனை வாங்கி விடுகின்றனர். எதற்கு நீங்கள் இவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள். நாங்கள் கொடுக்கிறோம் 999 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் என்று இந்திய நிறுவனமான ரிலையன்சும், கனடாவின் டேட்டா விண்ட் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.

புதிதாக வெளிவரும் இந்த ஸ்மார்ட் போன் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். மற்ற தொடக்க நிலை ஸ்மார்ட் போன்களை போன்றே இதிலும் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இமெயில் வசதிகளை பயன்படுத்தலாம். முதல் ஓராண்டுக்கு இவை இலவசமாகவே வழங்கப்படுகின்றன. 2 ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த போனில் சப்போர்ட் ஆகும்.

Datawind-Reliance-Communication

பிராசசர்களின் விலை குறைந்து வரும் நிலையில் குறைந்த விலை ஸ்மார்ட்போனை மக்களுக்கு வழங்குவது சாத்தியம்தான் என டேட்டா விண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக சீனா மற்றும் தைவானில் உள்ள முன்னணி பிராசசர் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் டிசம்பர் 28ஆம் தேதி ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று இந்த போன் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்தத் தகவலையும் ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. எனினும் ரிலையன்ஸ் நிறுவனம் செல்போனை முதன்முதலில் விற்கத் தொடங்கியது போது 500 ரூபாய்க்கு விற்றது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்