ஸ்பைடர் ஆடியோ விழாவில் கமல், ரஜினி…?

0
278

இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் கண்டிப்பாக கமல், ரஜினி கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. காரணம் லைக்கா.

முருகதாஸ் மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கில் இயக்கியிருக்கும் படம், ஸ்பைடர். பெரும் பொருட்செலவில் தயாராகியிருக்கும் இந்தப் படம் செப்டம்பர் இறுதியில் வெளியாகிறது. செப்டம்பர் 9 தமிழ் பாடல்களை வெளியிடுகின்றனர். மகேஷ்பாபுவின் முதல் நேரடித் தமிழ்ப் படம் என்பதால் ஆடியோ விழாவை அமர்க்களப்படுத்த நினைக்கிறது, படத்தின் தமிழக உரிமையை வாங்கியிருக்கும் லைக்கா.

கலைவாணர் அரங்கில் நடக்கவிருக்கும் ஆடியோ விழாவில் கமல், ரஜினியை பங்கேற்க உள்ளனர். லைக்கா கமலின் மருதநாயகம் படத்தை தயாரிக்கவிருப்பதாலும், ரஜினியின் 2.0 படத்தை லைக்கா தயாரித்து வருவதாலும் இருவரும் ஸ்பைடர் ஆடியோ விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ’முதலிரவு மாத்திரை’: கர்ப்பமாகும் முன்பு தாய்மார்கள் என்ன சாப்பிட வேண்டும்?

இதையும் படியுங்கள்: “விஞ்ஞானிகளின் அறிவை மதிக்க வேண்டும்”: டி.ஆர்.கோவிந்தராஜன்

இதையும் படியுங்கள்: வச்சுட்டான்யா ஆப்பு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்