‘ஸ்புட்னிக்-5’: இந்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது ரஷ்ய தடுப்பூசி

“Within September 10 and 13, we will be able to obtain permission to release a batch of the vaccine for civilian use.

0
653

‘ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்-5’ இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்ய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

‘கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு நாங்கள்தான்’ என, உலக நாடுகளுக்கு ரஷ்யா அறிவித்தது. இப்போது, ​​ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோவிட் -19 தடுப்பூசி இந்த வார தொடக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ‘ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3 ஆம் கட்டத்துக்குச் செல்லவில்லை’ எனக் கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர்புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் தங்களது தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா. மேலும் தங்கள் தடுப்பூசி அனைத்து கட்ட சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டோம் என்று சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா அறிவித்தது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி நாட்டின் சுகாதாரத் துறை ஒப்புதலுக்கு பிறகு இந்த வாரம் பயன்பாட்டுக்கு வரும் என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. செப்டம்பர் 10 முதல் 13 ஆம் தேதிக்குள்ளாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கான ஒப்புதல் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here