சுஜாய் கோஷ் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான படம் பத்லா. பழிக்குப்பழி. அமிதாப்பச்சன், தாப்ஸி நடித்திருந்தனர். முதல்நாள் வெள்ளிக்கிழமை இந்தியாவில் பத்லா 5.04 கோடிகளை வசூலித்தது. சனி 8.55 கோடிகள். ஞாயிறு 9.61 கோடிகள். நாளுக்குநாள் வசூல் அதிகரித்தது. திங்கள்கிழமை வேலைநாளில் 3.75 கோடிகள். செவ்வாய் சற்று அதிகரித்து 3.85 கோடிகள். முதல் 5 தினங்களில் இந்தியாவில் மட்டும் 30.80 கோடிகள். படம் வெற்றி என அறிவித்திருக்கிறார்கள்.

இந்த வெற்றிக்கு காரணம் தி இன்விசிபிள் கெஸ்ட் என்ற ஸ்பானிஷ் திரைப்படம்.

2012 இல் தி பாடி என்ற படத்தை இயக்கிய ஓரியோல் பாலோவின் இரண்டாவது படம் தி இன்விசிபிள் கெஸ்ட். தி பாடி படத்தைப் போல இதுவும் ஒரு க்ரைம் த்ரில்லர். 2016 இல் படம் வெளியானது.

தனது காதலியை கொலை செய்ததற்காக ஒரு தொழிலதிபர் கைது செய்யப்படுகிறார். வழக்கு கோர்ட்டுக்கு வருவதற்கு முந்தைய தினம், ஒரு புதிய சாட்சியை அரசாங்க தரப்பு ஆஜர்படுத்த இருப்பது வழக்கறிஞருக்கு தெரிய வருகிறது. இதனால் அனுபவம் வாய்ந்த டிபென்ஸ் அட்டார்னி ஒருவரை தொழிலதிபரை சந்திக்க அனுப்பி வைக்கிறார். அவர் தொழிலதிபர் பல பொய்களை சொல்வதை கண்டறிகிறார். அவரது விசாரணையில் தொழிலதிபரும், அவரது காதலியும் செய்த ஒரு கொலை தெரிய வருகிறது.

கொலை செய்யப்பட்ட இளைஞன் யார், தொழிலதிபரின் காதலியை கொலை செய்து அந்த கொலையில் அவரை மாட்டிவிட்டது யார், யாருக்கும் தெரியாத இந்த கொலை எப்படி அவரை தொடர்ந்து வந்தது என்ற கேள்விகளுக்கு படத்தின் இறுதியில் பதில் கிடைக்கையில் ஆச்சரியப்பட்டு போகிறோம்.

கடந்த மூன்று வருடங்களில் இந்திய க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் அதிகம் ரசித்த படம் தி இன்விசிபிஸ் கெஸ்டாகவே இருக்கும். அந்தப் படத்தின் உரிமையை வாங்கி பத்லா என்ற பெயரில் இந்தியில் எடுத்திருக்கிறார்கள். கதை வெளிநாட்டில் நடப்பது போல் எடுத்திருப்பதால் ஒரிஜினலின் குவாலிட்டியில் எண்பது சதவீதத்தை கொண்டுவர முடிந்திருக்கிறது. ஒரிஜினலில் வரும் முதன்மை கதாபாத்திரம் – தொழிலதிபர் – ஆண். அதனை இதில் பெண்ணாக – தாப்ஸி – மாற்றியிருக்கிறார்கள்.

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here