ஸ்னோலினும் ரஸான் அல் நஜ்ஜரும்

The stories of Snowlin and Razan Al Najjar are connected by an unseen thread

0
776
17 வயது ஸ்னோலின், அரசு பயங்கரவாதத்தால் உயிரிழந்தார்

இரண்டு பேருமே ஸ்னைப்பர் எனப்படுகிற குறி பார்த்து சுடுவதில் பயிற்சி பெற்ற அரசுக் கூலிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். 17 வயதான மாணவி ஸ்னோலின் மே 22 ஆம் தேதியன்று தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் தாமிர நச்சு ஆலையை மூடுவதற்கான போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். 21 வயதான செவிலியர் ரஸான் அல் நஜ்ஜர் ஜூன் 1ஆம் தேதியன்று பாலஸ்தீனத்தின் காஸாவில் குண்டுக் காயம்பட்ட போராட்டக்காரருக்கு மருத்துவ உதவி செய்வதற்காக சென்றபோது இஸ்ரேலிய ஸ்னைப்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நல்ல நீருக்கும் காற்றுக்குமான மக்களின் விருப்பங்களை அழகாக எடுத்துச் சொல்வதால் ஸ்னோலின் வாயில் குறி பார்த்து சுடப்பட்டார். செவிலியருக்கான வெள்ளை மேலங்கியுடன் சென்று காயம்பட்ட போராட்டக்காரருக்கு முதலுதவி செய்த ரஸான் முதுகில் சுடப்பட்டு உயிரிழந்தார்.

ஸ்னோலின் மக்களுக்காக வாதிடும் சிறந்த வழக்குரைஞராக வருவார் என்று அவரது பெற்றோர் ஆசையாக இருந்தார்கள்; மக்களுக்காக பேசும் சொற்கள்தான் அவருடைய ஆயுதம். ரஸானின் தந்தை மகளின் ரத்தம் தோய்ந்த வெள்ளை ஆடையைக் காட்டியவாறு சொல்கிறார் “இதுதான் ரஸானின் ஆயுதம்”. வெள்ளை அங்கியின் பாக்கெட்டுகளிலிருந்து பேண்டேஜ்கள், கையுறைகளைக் காட்டிச் சொல்கிறார் “இவைதான் அவளுடைய ஆயுதங்கள்”. பாலஸ்தீனத்தில் போர்ச்சூழல் நிலவுகிறது. ஆயுதம் தரித்த இஸ்ரேலுக்கும் நிராயுதபாணிகளான மக்களுக்குமிடையே போர். தூத்துக்குடியிலும் போர்ச்சூழல் நிலவுகிறது. வேதாந்தா ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாகி போன ஆயுதம் தரித்த காவல் துறைக்கும் நிராயுதபாணிகளான மக்களுக்குமிடையே போர். ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களுக்குமிடையே நடக்கும் இந்தப் போர் ஓய்வதில்லை.

21 வயது ரஸான் அல் நஜ்ஜர் அரசு பயங்கரவாதத்தால் உயிரிழந்தார்
21 வயது ரஸான் அல் நஜ்ஜர் அரசு பயங்கரவாதத்தால் உயிரிழந்தார்

ஸ்னோலின்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்