ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 48 எம்.பி பிரைமரி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

The Vivo V19 is the successor to the Vivo V17 and is yet another selfie-focused smartphone from the company. Vivo has focused on the design and the build quality of the device and the V19 feels like a premium device.

0
64

விவோ நிறுவனம் தனது புதிய மாடலான ‘விவோ வி 19’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

விவோ வி19 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 2400×1080 பிக்சல் ரெசல்யூஷன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

Vivo-V19-Arctic-Blue-1280x720

இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. விவோ வி19 ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 32 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 48 எம்.பி பிரைமரி கேமரா சென்சாருடன் 8 எம்.பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்.பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. வீடியோவை பொறுத்தவரை, கைகள் அசைந்தாலும், அசைவில்லாத வீடியோவை எடுக்க முடியும்.

புதிய விவோ வி19 ஸ்மார்ட்போனில் ஃபன்டச் ஒஎஸ் 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

‘பியானோ பிளாக்’ மற்றும் ‘மிஸ்டிக் சில்வர்’ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நிறைய சலுகைகளும் தரப்பட்டு உள்ளன.

விவோ வி19 சிறப்பம்சங்கள்:

– 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 2400×1080 பிக்சல் ரெசல்யூஷன்

– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

– குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்

– 8 ஜிபி ரேம்

– 128ஜிபி மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– 48 எம்பி பிரைமரி கேமரா

– 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா

– 2 எம்பி மேக்ரோ சென்சார்

– 2 எம்பி டெப்த் சென்சார்

– 32 எம்பி செல்ஃபி கேமரா

– 4500 எம்ஏஹெச் பேட்டரி

– 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்


விலை: 8+128 ஜி.பி., – ரூ.27,990
8+256 ஜி.பி., – ரூ. 31,990

இந்த போன், விவோ இந்தியா இ-ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ தளங்களிலும், இந்தியா முழுதும் உள்ள விவோ ரீடெய்ல் ஸ்டோர்களில் ஆப்லைனிலும் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here