ஸ்டெர்லைட் போராட்டம் : தவிர்க்க முடியாத சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது – ஜெயக்குமார்

0
219

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 100வது நாளை எட்டியது . இதனை முன்னிட்டு பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், ஏராளமான போலீஸின் தடுப்புகளையும் தாண்டி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர் . கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டது .மேலும் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது இளம் பெண் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் போராட்டம் குறித்து கூறியதாவது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி நிலைமை குறித்து அறிந்து முதல்வர் பழனிசாமி வருத்தப்பட்டார். தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு நிச்சயம் மதிப்பளிக்கும். ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு.

தூத்துக்குடி போராட்டம் குறித்து இன்னமும் முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்