ஸ்டெர்லைட் போராட்டத்தில் 2 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

0
669

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிஷ்டா, கந்தையா, கிளாஸ்டன், தமிழரசன் என்ற மாரிச்சாமி, சண்முகம், மணிராஜ் ஆகிய பெயர்களை உயிரிழந்தவர்களின் பெயர்கள் என்று மக்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

1)ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்)

2) கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி)

3)கந்தையா (சிலோன் காலனி – தூத்துக்குடி)

4) வெனிஸ்டா (17 – பெண்) தூத்துக்குடி

5) தமிழரசன் – புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை – தூத்துக்குடி)

6) சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி)

7) அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி)

8) மணிராஜ் (தூத்துக்குடி)

மேலும் 2 பெண்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலி.

ஆக அதிகாரபூர்வமாக 10 பேர்

காயம்பட்டோர் சுமார் 65 பேருக்கு கூடுதலாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பொதுமக்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியது. தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று காலை (செவ்வாய்க்கிழமை) மக்கள் கூட்டமைப்பினர் அறிவித்தபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஆங்காங்கே திரண்டனர். பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்தார்கள்.தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி இல்லை என்றனர்.

அப்போது போலீஸாருக்கும், பொது மக்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு போலீஸ் தடையையும் மீறி பொதுமக்கள் பேரணியாக புறப்பட்டு சென்றார்கள்.

இதனிடையே தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே போராட்டக்குழுவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டாது. இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்த போலீஸ் வாகனங்களை தாக்கப்பட்டன . சிக்னல் மற்றும் தடுப்புகளும்
உடைத்து எறியப்பட்டன. தொடர்ந்து போலீஸாரை கடந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறினார்கள்.

அதே வேளையில் மடத்தூர் பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்றார்கள். அவர்களை மடத்தூர் பகுதியில் போலீஸார் தடுப்பு கட்டைகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும்-பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் எண்ணிக்கையை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பதட்டம் உண்டானது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

எனினும் போலீஸ் தடுப்பையும் மீறி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றார்கள். தூத்துக்குடி 3-ம் மைல் பாலம் அருகே பொதுமக்கள் திரண்டு சென்ற போது கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பொதுமக்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். தடியடியும் நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தின் போது போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்த தனியார் வங்கி மீதும் கல்வீசப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அப்போது பொதுமக்களை கலைக்க போலீஸார்
துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் ஏராளமானவர்கள் காயம் அடைந்தார்கள். துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தார்கள் . மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி பகுதி முழுவதுமே போர்க்களமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here