ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 65பேர் விடுவிப்பு – தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

0
207

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .

இந்நிலையில் தூத்துக்குடி வன்முறைக்கு காரணமானவர்கள் என்று கைது செய்யப்பட்ட 65 பேரையும் விடுவிக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்த போலீசார், அவர்களை தூத்துக்குடி குற்றவியல் 1-வது நீதிமன்ற நீதிபதி அண்ணாமலை முன் ஆஜர்படுத்தினர். இரவு முழுவதும் போலீசார் தங்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர்.

மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ஷைனியின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட 65 பேரும் விடுவிக்கப்பட்டனர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் .இதையடுத்து தூத்துக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 25ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது . தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணைய தள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்