ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘”அரசின் பயங்கரவாதம்” – ராகுல்காந்தி

0
371

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு அரசின் பயங்கரவாதம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பொதுமக்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியது. தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று காலை (செவ்வாய்க்கிழமை) மக்கள் கூட்டமைப்பினர் அறிவித்தபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .
அப்போது போலீஸார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர் . பலர் காயமடைந்தனர் .

இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் –

தமிழ்நாட்டில் , தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது அரசு முன்னின்று நடத்திய பயங்கரவாதம். நீதிக்காக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here