ஸ்டெர்லைட்  ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 


இந்த மனு தொடர்பான விசாரணையும், வாதங்களும் கடந்த 10-ஆம் தேதி நிறைவடைந்தன. இதையடுத்து, மனு மீதான  உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஏ.கே.கோயல் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே பசுமைத்தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், தங்களை விசாரிக்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்ககூடாது என்று ஸடெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்