தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அரசாணையை ரத்து செய்ய முடியாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போலீஸார் மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்ததனர். இதையடுத்து, தமிழக அரசு அந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது.

அதன்படி, கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்திருந்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிகளை மீண்டும் தொடர அனுமதி கோரியும் அந்நிறுவனம் முறையிட்டுருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், ஆலை பராமரிப்பு பணிகளை தொடரவும் அனுமதிக்க முடியாது என வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆகஸ்ட் 9-ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்